வார்டு 84: கோவை கரும்புக்கடை அருகே நாய் கடித்து 10 குழந்தைகள் உட்பட 11 பேர் காயம் - அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

இன்று இரவு ஞானியார் நகர் பகுதியில் தெரு நாய் ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கடிக்க துவங்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். சிகிச்சை பெற்று வருபவர்களை, காவல் ஆணையர் மற்றும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டனர்.



கோவை: கோவை 84 ஆவது வார்டு கரும்புக்கடை அருகே ஞானியார் நகரில் தெரு நாய் கடித்ததில் 10 குழந்தைகள் உட்பட 11 பேர் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கோவை மாநகராட்சி 84 ஆவது வார்டுக்கு உட்பட்ட கரும்புக்கடை, ஜி.எஸ்.நகர் பகுதிகளில் தெரு நாய்கள் அதிகளவு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கரும்புக்கடை ஞானியார் நகர் பகுதியில் நேற்று இரவு திடீரென அங்கிருந்த தெரு நாய் ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கடிக்க துவங்கியுள்ளது.

தப்பிச் செல்ல முயன்ற குழந்தைகளை துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதில், 10 குழந்தைகள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்த 11 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு

சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.



சம்பவம் குறித்து தகவலறிந்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மாநகர காவல் ஆணையாளர், பாலகிருஷ்ணன் ஆகியோர் குழந்தைகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், 84 ஆவது வார்டு கவுன்சிலர் அனிமா ராஜா உசேன் பாதிக்கப்பட்டகுழந்தைகளை நேரில் சந்தித்தார்.



பின்னர் இது குறித்து பேசிய கவுன்சிலர் அனிமா ராஜா உசேன், 84 ஆவது உள்ள கரும்புக்கடை, ஜி.என்.மில்ஸ் பகுதியில் சுமார் 30 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. இங்கு தெரு நாய் அதிகளவு உள்ளதாக ஏற்கனவே மாநகராட்சியில் புகார் அளித்துள்ளேன். மேலும், இது குறித்து மாமன்ற கூட்டத்திலும் பேசியுள்ளேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மீண்டும் மாமன்ற கூட்டத்தில் இதே பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுக் காண வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...