'குடியரசு தலைவரான திரவுபதி முர்மு' நீலகிரியில் கோத்தர் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாட்டம்..!

குடியரசு தலைவர் தேர்தலில் பழங்குடியின வகுப்பை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றதை, நீலகிரி மாவட்ட கோத்தர் பழங்குடியின மக்கள், பாரம்பரிய இசை கருவிகளை இசைத்தும், நடனமாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில், கோத்தர் பழங்குடியின மக்கள், பாரம்பரிய இசை இசைத்து, பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிம், திரவுபதி முர்முவின் வெற்றியை கொண்டாடினர்.

இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக பாஜக சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். இதன் மூலம் பழங்குடியினத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவர், 2-வது பெண் குடியரசுத்தலைவர், மிகவும் இளைய குடியரசு தலைவர், என பல்வேறு பெருமைகளை திரவுபதி முர்மு பெற்றார். வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பழங்குடியின மக்களும் தங்கள் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் மிகப்பெரிய பதவியை அலங்கரிக்க போவதால் அதனை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பழங்குடியின கோத்தர் இன மக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் காமராஜர் சதுக்கத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து, பாரம்பரிய இசைகளை முழங்கி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

காமராஜர் சதுக்கத்தில் தொடங்கிய ஊர்வலமானது நேரு பூங்கா வளாகத்தில் உள்ள கோத்தர் பழங்குடியின மக்களின் குல தெய்வ கோவிலான அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு சென்றது. அங்கு பழங்குடியின மக்கள் வழிபாடு நடத்தினர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல் வழியாக வெற்றி கோஷங்களை எழுப்பியவாறு, ஊர்வலமாக சென்று பேருந்து நிலையத்தை அடைந்தனர். மேலும் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை பழங்குடியின மக்கள் மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின், பழங்குடியின வெற்றி தினமாக கொண்டாட உள்ளதாக தெரிவித்தனர்.

அவருக்கு கிடைத்த வெற்றி எங்கள் பழங்குடியின மக்களின் வெற்றி எனவும் அவர்கள் கூறினர். இதில் நீலகிரி வனவாசி கேந்திர தலைவர் ராஜன், நீலகிரி ஆதிவாசிகள் நல சங்க நிர்வாகி புஷ்பகுமார், புது கோத்தகிரி ஊர்த்தலைவர் சுப்பிரமணி, பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் இட்டக்கல் போஜராஜன், அம்பிகை கணேசன், அன்பரசன், ஹால்தொரை , உதயகுமார், முட்டை கடை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...