கோவையில் சமையலின் போது தீப்பிடித்து படுகாயமடைந்த பெண் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

சமையலின் போது எதிர்பாராத விதமாக உடையில் தீ பிடித்து படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: சமையலின் போது தீப்பிடித்து படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (55), கூலி தொழிலாளி. இவரது மனைவி வனஜா (45). தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி சங்கர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்து வனஜா பம்ப் ஸ்டவ் அடுப்பில் டீசல் ஊற்றி தீ பற்ற வைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீ பிடித்தது. வலியால் துடித்தபடி வனஜா வெளியே ஓடி வந்தார்.

வேலை முடிந்து வந்த சங்கர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது மனைவியின் உடலில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வனஜாபரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...