செஸ் ஒலிம்பியாட் போட்டி: கோவை மாநகர காவல் ஆணையாளர் சைக்கிள் பேரணி விழிப்புணர்வு- ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவைய மாநகர காவல் ஆணையாளர், வி, பாலகிருஷ்ணன் ஆகியோர் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் சார்பாக விழிப்புணர்வு பயணத்தை ஆட்சியர் ஜி எஸ். சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


கோவை: 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்

போட்டி ஜூலை 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்கவுள்ள நிலையில்,தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், போட்டி குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்திலும், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி, கல்லூரி மாணவர்கள் நடை பேரணி, அரசு அலுவலகங்களில் செஸ் போட்டிகள், பள்ளி, கல்லூரி வாகனங்களில் செஸ் போட்டியின் மாஸ்காட் லோகோ ஸ்டிக்கர்கள் ஓட்டுவது என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக, கோவை மாநகர காவல் ஆணையாளர், வி, பாலகிருஷ்ணன், ஆகியோர் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில்,மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் சார்பாக விழிப்புணர்வு பயணத்தை, ஆட்சியர் ஜி எஸ். சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில், மாநகர காவல் ஆணையாளர் வி. பாலகிருஷ்ணன் இளைஞர்களுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியானது, ரேஸ்கோர்ஸ் பகுதியை சுற்றி நடைபெற்றது.



நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...