திமுக பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு பொது மக்களின் கவனத்தை திசைதிருப்ப முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி வருவதாக முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் திருப்பூரில் பேட்டியில் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் பெரிய கடைவீதியில் உள்ள மாநகர மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக தொடர்ந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்த போது எந்த விதமான கட்டணத்தையும் உயர்த்தாத நிலையில் திமுக அரசு தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது பொதுமக்களுக்கு ஒரு பேரிடியாக அமைந்திருப்பதாகவும், திமுக அரசின் மீது உள்ள கோபத்தை காட்டும் வகையில் அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள் எனவும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பவே முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் திமுக அரசு ரெய்டு நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.



இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...