வாழ்க்கைல யாராவது எங்களுக்கு இவ்ளோ பண்ணுவாங்களான்னு தெரியாது,முதல் முறையாக விமானத்தில் சென்னை பறந்த ஆதிவாசி மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
கோவை: வாழ்க்கைல யாராவது எங்களுக்கு இவ்ளோ பண்ணுவாங்களான்னு தெரியாது,முதல் முறையாக விமானத்தில் சென்னை பறந்த ஆதிவாசி மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை சுற்றியிருக்கும் தாணிகண்டி, மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோவில்பதி கிராமங்களை சேர்ந்த 41 பழங்குடி இன மக்கள் முதல் முறையாக கோவையிலிருந்து சென்னைக்கு விமான பயணம் செய்தனர்.

இவர்கள் இண்டிகோ விமானத்தில் காலை 11:30 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு 12 :45-க்கு சென்னை வந்தடைந்தனர். இவர்கள் அனைவருமே முதன்முறையாக விமானத்தில் பயணிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஷா யோக மையத்திற்கு அருகே உள்ள ஆதியோகி சிலை வளாகத்தில் இளநீர் விற்பனை செய்யும், மடக்காடு கிராமத்தை சேர்ந்த வெள்ளாச்சியம்மா மகிழ்ச்சியுடன் கூறுகையில் இதுவரை தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் தான் விமானத்தை பார்த்திருக்கோம். முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தது ரொம்ப சந்தோசமா இருந்தது என்றார்.
2017 -ல் திறக்கப்பட்ட ஆதியோகி சிலை அங்குள்ள பழங்குடியினரின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மக்கள்
வருகை அதிகரித்ததால் உணவு கடைகளுக்கான தேவை அதிகரித்தது. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வாழ்ந்து வரும் இந்த பழங்குடி மக்கள், ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பிரம்மச்சாரகளின் உதவியோடு கடைகள் நடத்த தொடங்கினர்.
இந்த கடைகள் மூலமாக அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்தார்கள். இந்த கடைகளின் மூலம் ஈட்டிய லாபத்தை கொண்டே இந்த விமான பயணத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
முதல் முறையாக விமான பயணம் செய்யும், மடக்காடு கிராமத்தை சேர்ந்த மூர்த்தி கூறுகையில், என் மனைவிக்கு எப்போதும் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. அதனால் திருப்பதிக்குப் போக நாங்க தயார் பண்ணிட்டு இருந்தோம், அப்பதான் ஈஷாவல இருந்து ஒரு சாமி சென்னைக்கு போறத பத்தி சொன்னாங்க. நான் தினமும் அதப்பத்தி கேட்டுட்டே இருப்பேன். என் மனைவி ஆசை இன்று நிறைவேறிடுச்சுனு எனக்கு சந்தோஷமா இருக்கு என்கிறார்.
இவர்களை சிறப்பித்து வரவேற்கும் விதமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கோவை விமான நிலையத்தில் வரவேற்பு பலகை வைத்ததோடு, விமானத்தில் ஏறியதும் விமானி இவர்களை மற்ற பயணிகளுக்கு ஒலி பெருக்கியில் அறிமுகப்படுத்தினார். மேலும் பயணத்தின் பொழுது அனைவருக்கும் சிறப்பான உணவும் வழங்கப்பட்டது.
முதன்முறையாக விமானப்பயணம் செய்து சென்னை வந்த இவர்கள், சென்னையின் பல இடங்களை ஆச்சர்யத்தோடு சுற்றிப்பார்த்து
மகிழ்ந்தனர்.

கடல், கடற்கரை, சூரிய உதயம், மெட்ரோ ரயில் பயணம், மால், சினிமா தியேட்டர் என பெருநகர வாழ்வினை பார்த்திராத
இவர்களுக்கு ஜூலை 21-ம் தேதி வாழ்வின் மறக்க முடியாத நாளாக இவர்களின் நினைவுகளில் இருக்கும்.

காடு, மலைப்பகுதிகளிலேயே வாழ்ந்த இவர்கள், அதிகாலையில் சூரியோதயத்தை காண கோவளம் கடற்கரைக்கு சென்றார்கள். சூரியன்
உதிக்கும்போது அதனை கண்ட உணர்ச்சிப்பெருக்கில் கையெடுத்து வணங்கி மகிழ்ந்தனர்.

அதன்பிறகு பெரிய தரமான உணவகத்தில் உணவருந்தி, சத்யம் சினிமா தியேட்டரில் திரைப்படம் பார்த்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தைக் கூட அனுபவித்ததில்லை. சென்னை மெட்ரோ ரயில் பயணத்தை வெகுவாக ரசித்து பயணித்தபிறகு, அன்றைய தினம் மாலை சென்னையிலிருந்து கோவைக்கு ரயில் மூலம் பயணம் செய்து திரும்பினார்கள்.

"இது வெறும் ஆரம்பம் தான். ஆதியோகிக்கு வருகின்ற மக்கள் கூட்டம் அதிகமாகும். அதனால் அடுத்த வருஷம் இன்னும் 100 பேர் விமானத்தில போவோம். இது எங்க எல்லாருடைய ஆசை என முள்ளாங்காட்டை சேர்ந்த சூரியகுமார் தெரிவித்தார்.