கோவையில் 6-வது புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில் தமிழக மின்வாரியம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது, இது கடந்த ஆட்சியில் ஏற்படுத்தபட்ட நிர்வாக சீர்கேட்டால் தான் 1 லட்சத்து, 59 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் சுமை உயர்த்தபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோவை: கோவையில் 6-வது புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில் தமிழக மின்வாரியம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது, இது கடந்த ஆட்சியில் ஏற்படுத்தபட்ட நிர்வாக சீர்கேட்டால் தான் 1 லட்சத்து, 59 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் சுமை உயர்த்தபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மின்சார வாரியம் ஆண்டிற்கு 16 ஆயிரத்து, 500 கோடி வட்டி செலுத்த கூடியளவிற்கு தள்ளபட்டுள்ளதாகவும், கடந்த காலத்தில் மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை மின்சார வாரியம் உற்பத்தி செய்தது, மூன்றில் இரண்டு பங்கு மின்சாரத்தை தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கியது, ஆனால் மின் மிகை மாநிலம் என்று பொது மக்கள் மத்தியில் ஒரு தவறான பிரச்சாரத்தை முன் வைத்தனர்.
மின் மிகை மாநிலம் என்றால் 4 லட்சம் விவசாயிகள் மின் இணைப்பிற்காக 21 ஆண்டுகள் காத்திருந்தவர்களுக்கு இனைப்பு வழங்கி இருக்கலாம், 2006 ஆண்டில் கலைஞர் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட மின் திட்டங்கள், 10 ஆண்டுகள் செயல்படுத்தபடாமல் கிடப்பில் போடபட்ட அந்த திட்டங்களை, விரைவாக முடிக்க உத்தரவிட்டு வரக்கூடிய 5 ஆண்டுகளில் 6 ஆயிரத்து, 220 மெகா வாட் கூடுதல் நிறுவு திறன் மின் வாரியத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
மேலும் நிலுவையில இருந்த திட்டங்களுக்காக 12 ஆயிரத்து, 600 கோடி அளவிற்கு கூடுதலாக வட்டி மட்டும் கட்டபட்டுள்ளது, மின்சார உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள கட்சிகளான அதிமுக, பாஜக மின்கட்டணம் அதிகம் உள்ள கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.
மக்களுக்காக மின்சார உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் என அறிவித்துள்ள அரசியல் கட்சியிடம் சமையல் சிலிண்டர் கேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏன் கண்டிக்கவில்லை என பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
மின்சார கட்டணம் குறித்து எஸ்.பி.வேலுமணி பேசிய கருத்திற்கு, பதில் அளித்த அவர், அதிமுக ஆட்சியில் 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சுமார் 37 விழுக்காடு மின்சார உயர்வை அதிமுக அரசு அறிவித்தது, ஆனால் 1 லட்சத்து, 59 ஆயிரம் கோடி மின்துறை கடன் வைத்தது ஏன், உதய் திட்டத்தில் அதிமுக அரசு ஏன் கையெழுத்திட்டது என எஸ்.பி.வேலுமணி பதில் சொல்லட்டும்.
இந்த மின்சார உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, சமையல் கியாஸ் போல மொத்த பணத்தை பெற்று விட்டு, வங்கி கணக்கில் மானியம் வழங்கப்போவது இல்லை, மின்கட்டணத்திற்கான மானியத்தை கழித்துவிட்டு கட்டணம் செலுத்தினால் போதும் என தெரிவித்தார்.
மேலும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தும் கட்சி பா.ஜ.க கர்நாடாவிலும், குஜராத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா, 410 ஆக இருந்த விலையை 1100 ருபாய்க்கு விற்கும் நிலையில் பொதுக்களுக்களுக்காக அதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா.
திங்ககிழமை ஆர்ப்பாட்டம் நடத்தும் அதிமுக எதனால் ஆண்டுக்கு ஆண்டு கடன் உயர்ந்தது என்பதை சொல்வார்களா, ஆர்ப்பாட்டம் நடத்தும் இரு கட்சிகளும் சின்னங்கள் வேறு, வேறு தான் என்றாலும் ஓரே இயக்கங்கள்தான்.
கடந்த ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் சேர்ந்தற்கான காரணத்தை அதிமுகவினர் சொல்வார்களா, யார் நிர்பந்தம் காரணமாக உதய் திட்டத்தில் சேர்ந்தார்கள் என்பதை விளக்குவார்களா என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்கு கடன் கொடுக்க கூடாது என ரிசர்வ் வங்கிக்கே மத்திய அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்தனர், ஆனால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் திமுக தேர்தல் வாக்குறிதகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது எனவும் மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கீடு வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தப்பட்ட பின்பு நடைமுறைபடுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.