தெற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மை பணிகள்‌ மற்றும்‌ மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ ஆய்வு..!

தூய்மை பணிகள் மற்றும் பாலு கார்டன்‌ பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்தும், குனியமுத்தூர்‌ மாநகராட்சி பள்ளியில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகள்‌ கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல்‌ பெற்று விரைவில்‌ பணிகளை மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.



கோவை‌: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மை பணிகள்‌ மற்றும்‌ மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.93-க்குட்பட்ட குனியமுத்தூர்‌, ரங்கசாமி நாயுடு நகரில்‌ மழைநீர்‌ வடிகாலை தூர்வாரும்‌ பணியை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றிட உத்தரவிட்டு, பழுதடைந்த சாலையை உடனடியாக செப்பனிட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்‌,



குனியமுத்தார்‌ - பாலக்காடு சாலை, இடையர்பாளையம்‌ பிரிவு பகுதியில்‌ ஆய்வு செய்து, சாலையில்‌ தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டு, சாலையோரங்களில்‌ தேங்கும்‌ மழைநீரை உடனடியாக அகற்றிடவும்‌,



வார்டு எணி்‌.92க்குட்பட்ட பாலு கார்டன்‌ பகுதியில்‌ மழைநீர்‌ வடிகாலை புரனமைத்து மழைநீரை வெளியேற்ற பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்தொடர்ந்து, பாலு கார்டன்‌ பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து பொதுமக்களிடம்‌ குறைகளை கேட்டறிந்த பின்னர்‌, 



விநாயகர்‌ கோயில்‌ பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப்‌ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



மேலும்‌, கோவைப்புதார்‌ பிரிவு, இ.பி.காலனி பகுதியில்‌ உள்ள கால்வாயை 850 மீட்டர்‌ தூர்வாரும்‌ பணி முடிவுற்றதை ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌ அப்பகுதியில்‌ 942 மீட்டர்‌ தொலைவிற்கு, ரூ.51.74 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ தார்‌ சாலை பணியை ஆய்வு செய்து பணியை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, குனியமுத்தூர்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு, பள்ளியில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகள்‌ கட்டடம்‌ கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல்‌ பெற்று விரைவில்‌ பணிகளை மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



இந்த ஆய்வின்போது, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, தெற்கு மண்டல தலைவர்‌ தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள்‌ செந்தில்குமார்‌, இளஞ்சேகரன்‌, உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் இராமு மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...