கேரளா - கர்நாடகாவில் தொடர் மழை: திருப்பூர் பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியை 25-சதவீதம் குறைப்பது குறித்து பண்ணையாளர்கள் ஆலோசனை..!

கனமழையின் காரணமாக கறிக்கோழிகளை பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலையில், கறிக்கோழியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிலைமை சரியாகும் வரை கறிக்கோழி உற்பத்தியை 25 சதவீதம் குறைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.


திருப்பூர்: கறிக்கோழியின் கடும் விலை வீழ்ச்சியால் உற்பத்தியை 25-சதவீதம் குறைப்பது குறித்து திருப்பூர் பல்லடத்தில் பண்ணையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கறிக்கோழி நுகர்வை பொறுத்து அதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். இந்நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதால் நுகர்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், கறிக்கோழி நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி கறிக்கோழி 1 கிலோ கொள்முதல் விலை 100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 66 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ.90 வரை செலவாகும் நிலையில், இந்த கடும் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நிலைமை சரியாகும் வரை கறிக்கோழி உற்பத்தியை 25 சதவீதம் குறைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...