கோவையில் தனியார் நகை கடை விற்பனையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 8-பவுன் நகை கொள்ளை..!

புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் தனியார் நகைக்கடை விற்பனையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 8-பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கொண்டையன்பாளையம் செந்தூர் கார்டன் பேஸ் 2 பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (33). இவர் பிரபல தனியார் நகைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

வினோத்குமார் மனைவி தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் அவர் சிவானந்தாமில்ஸ் பகுதியில் உள்ள அவரது தாய் விட்டி இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி வினோத்குமார் சிவானந்தா மில்ஸ் பகுதியில் உள்ள தனது மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றார்.

அங்கிருந்து பணிக்குச் சென்ற நிலையில் நேற்று அவரது வீட்டின் அருகே வசிக்கும் சன்மதி என்பவர் வினோத்குமாருக்கு செல்போன் மூலம் அழைத்து வீட்டின் கதவு திறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, வினோத்குமார் விரைந்து சென்று பார்த்த போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த வினோத்குமார் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து மர்ம நபர்கள் 8 பவுன் உள்ள 3 செயின்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...