கோவை ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சி மேற்கொள்ள வந்த ஆந்திராவை சேர்ந்த நபர் தூக்கிட்டு தற்கொலை.

ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிறப்பு யோகா மற்றும் தியான வகுப்புகளில் கலந்துக் கொள்ள நாட்டின் பகுதிகளில் இருந்து முன்பதிவு செய்து வகுப்புகளில்

பங்கேற்று வருகின்றனர். முறையாக யோகா மற்றும் தியானம் கற்பதன் மூலம் மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்தை நல்வழியில் பேண முடியும் என்பதால், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் ஈஷாவின் வகுப்புகளில் பங்கேற்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநில இளைஞர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர்கொள்ளு ரமணா (32). இவர்மன அழுத்தம் காரணமாக, கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில்சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

கடந்த ஒரு மாதமாக ஈஷா யோகா மையத்தில் தங்கியிருந்த ரமணா, நேற்றிரவு ஈஷாவிலுள்ள அவரது அறையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதத்தில், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொள்வதாக எழுதப்பட்டிருந்தது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆலாந்துறைபோலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் ரமணாவின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஈஷா யோக மைத்தில் டி.எஸ்.பி திருமால் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி பெற்று வந்த நபர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...