கோவை வனப்பகுதியில் இறந்த நிலையில் குட்டி யானை - வனத்துறையினர் விசாரணை.

கோவை வனச்சரகம் கெம்பனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்துச் சென்றனர். அப்போது, அட்டுக்கல் அடர்வனப் பகுதியில் பிறந்து சுமார் 1 மாதமே ஆன ஆண் யானைக் குட்டி இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.



கோவை: கோவைஅட்டுக்கல் வனப்பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டஒரு மாத ஆண் குட்டி யானைக்கு இன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கோவை வனச்சரகம் கெம்பனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்துச் சென்றனர். அப்போது, அட்டுக்கல் அடர்வனப் பகுதியில் பிறந்து சுமார் 1 மாதமே ஆன ஆண் யானைக் குட்டி இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அங்கு வனத்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், மாலை நேரம் ஆனதால், வன விலங்குகள் நடமாட்டம் கருதி, இன்று காலை கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

உடற்கூறு ஆய்வு முடிவிற்கு பிறகே யானை குட்டியின் உயிரிழப்புக்குகாரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமுகை வனப்பகுதியில் சென்ற வாரம் 2 மாத ஆண் குட்டியானை சடலமாக கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக,நேற்று அட்டுக்கல் வனப்பகுதியில் மீண்டும் ஒரு மாதமேயான ஆண் குட்டியானை இறந்த நிலையில் கண்டிடுக்கபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடரும் யானை இறப்புகள்வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...