திருப்பூரில் மூதாட்டியிடம் காவல்துறை என கூறி 8 பவுன் தங்க நகை திருட்டு

திருப்பூரில் காவல்துறையினர் எனக்கூறி மூதாட்டியிடம் 8 பவுன் தங்க நகையை நூதன முறையில் திருடி சென்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் காவல்துறையினர் எனக்கூறி மூதாட்டியிடம் 8 பவுன் தங்க நகையை நூதன முறையில் திருடி சென்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர், தென்னம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி வள்ளியம்மாள், இவரது கணவர் பழனிச்சாமி இறந்த நிலையில் வள்ளியம்மாள் மட்டும் தென்னம்பாளையம் காலனி பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் செக்கிங் வேலையும் செய்து வருகிறார். இந்நிலையில் வள்ளியம்மாள் சந்தைப்பேட்டைக்கு செல்வதற்காக அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் நின்று கொண்டிருந்தார். வள்ளிம்மாள் அவர்களை கடந்த சென்று போது, திடீரென அதில் ஒருவர் வள்ளிம்மாளை அழைத்து நாங்கள் இருவரும் போலீசார் என அறிமுகமாகி இந்த பகுதியில் பலரிடம் நகை மற்றும் பணத்தை சிலர் பறித்து சென்றுள்ளார்கள்.

இது தொடர்பாக விசாரணை நடத்த வந்ததாக தெரிவித்துள்ளனர். அப்போது அந்த இருவரும் வள்ளியம்மாள் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலி மற்றும் கைகளில் கிடந்த 4 பவுன் வளையல்களை அணிந்து செல்லாதீர்கள். நாங்கள் ஒரு பர்ஸ் தருகிறோம். இதில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய வள்ளியம்மாள் அதனை கழற்றி கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த மர்ம ஆசாமிகள் பர்சில் வைப்போது போல் வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் அவரது கவனத்தை திசை திருப்பிவிட்டு மற்றொரு பர்சை வள்ளியம்மாள் வைத்திருந்த பையில் போட்டுவிட்டு வீட்டிற்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.



இதனைத்தொடர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் இருவரும் சென்றுள்ளனர். இதற்கிடையே சந்தேகம் அடைந்த வள்ளியம்மாள் வீட்டிற்கு வந்து பர்சை பார்த்தார், அதில் கற்கள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் உறவினர்களுடன் சென்று புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூதாட்டியிடம் போலீஸ் எனக்கூறி நூதன முறையில் 8 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.



மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...