44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பது குறித்தும், விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வது குறித்தும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை: 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்க உள்ளதையொட்டி, அதற்கான ஜோதி ஒவ்வொரு மாவட்டத்திற்கு கொண்டு செல்லபடவுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திற்கு வரும் 25ம் தேதி, அந்த ஜோதி கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதியை கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பது குறித்தும், விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்வது குறித்தும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர், கவிதா மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.