பெத்திக்குட்டை வனமரபியல் ஆராய்ச்சி மைய பகுதியில் வனத்துறை அமைச்சர் ஆய்வு

கோவை, பெத்திக்குட்டை வனமரபியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.



கோவை: கோவை, பெத்திக்குட்டை வனமரபியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.



தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், வனமரபியல் மண்டலம் பெத்திக்குட்டை ஆராய்ச்சி மையத்தில், வனவிலங்குகள் குறிப்பாக காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கும் புகுந்து சேதம் விளைவிப்பதை தடுப்பதற்காக உயிர் வேலியாக ரயில்கள்ளி (cereus pterogonus), மற்றும் சொரமுள் (Sylindropuntia ramosissima) ஆகிய முட்செடிகளைக் கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து கோவை வனக்கோட்டம்,சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை சுற்று வனப்பகுதியில் வனவிலங்குகள் மீட்பு, சிகிச்சை மற்றும், மறுவாழ்வு மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தினை ஆய்வு செய்து, பின்பு புதுக்காடு பகுதியிலுள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு சென்றார்.



மேலும் அங்கிருந்து படகு மூலம் கூத்தாமுண்டி வடக்கு சுற்று வனப்பகுதியில் உள்ள வேட்டை தடுப்பு முகாமிற்கு சென்று வேட்டைத் தடுப்பு பணிகள் மற்றும் முகாம் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், வனச்சரக அலுவலர்கள், சிறுமுகை வனச்சரகம், மேட்டுப்பாளையம் வனச்சரகம், கோவை ஆராய்ச்சி சரகம், வனப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...