குடியரசு தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு முன்னணி வானதி சீனிவாசன் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

குடியரசு தலைவர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் திரௌபதி முர்முவிற்கு வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இணைப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


கோவை: இந்தியாவில் 15- வது குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை வகித்து வருகிறார்.



இந்நிலையில் ஆர்.எஸ்.புரத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தை தொடங்கினர். பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேசிய மகளிரணி தலைவரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தை துவங்கினர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் நாட்டினுடைய குடியரசுத்தலைவர் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது எனவும் இதுவரை உள்ள நிலவரப்படி திரவுபதி முர்மு முன்னிலையில் உள்ளார் என தெரிவித்தார். சமூக நீதி என்பது வெறும் வார்த்தை அல்ல எனவும் சொல்லாடல் அல்ல எனவும் அதனை ஒவ்வொரு செயலிலும் செயல்படுத்தக்கூடிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளதாக தெரிவித்தார்.

ஒடிசாவில் மிகச் சிறிய கிராமத்தில் பிறந்து பெண்களும் கல்வி கற்க முடியும் என்பதை நிரூபித்து தன்னுடைய கடுமையான உழைப்பினாலும் கடைக்கோடி கிராமத்தின் உடைய பெண்மணியை நாட்டின் முதல் குடிமகளாக பார்க்க முடியும் என்கின்ற சூழ்நிலையை பாஜக உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். வெற்றி முகத்தில் இருக்கக்கூடிய எங்களுடைய வேட்பாளர் தான் வெற்றி பெறப் போகிறார் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்நாட்டில் அனைவரும் காண வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைவருக்கும் ஆன சம வாய்ப்பு என்பதை நிலை நிறுத்துகின்ற கட்சியாக பாஜக கட்சியும்,பிரதமரும் உள்ளனர், என்பதை தெரிவிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் கோவையிலும் ஒவ்வொரு பகுதியிலும் வெற்றி கொண்டாட்டங்கள் இன்று முதல் துவங்கி உள்ளதாக தெரிவித்தார்.

இந்த வெற்றி கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் எனவும் கூறினார். குறிப்பாக பழங்குடி இன மக்கள் வாழும் கிராமங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். எங்களுக்கு எதிராக நின்ற வேட்பாளர் தங்களை எட்ட முடியாத அளவிற்கு நாங்கள் முன்னிலையில் இருப்பதாக கூறிய அவர் தேர்தலுக்கு முன்பாகவே கூட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாமல் கூட்டணிக்கு வெளியில் இருக்கின்ற கட்சிகளும் கூட மிகப் பெரிய ஆதரவினை தங்களுடைய வேட்பாளர்களுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி ராமசாமி, பாஜக இளைஞரணி மாநில செயலாளர் பிரீத்தி லட்சுமி உட்பட 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...