கோவை கிட்டாம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது

கோவை, கிட்டாம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை, அன்னூரை அடுத்த கிட்டாம்பாளையம் பகுதியில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அன்னூர் காவல் ஆய்வாளர் ராஜதுறை மற்றும் உதவி ஆய்வாளர் உதயச்சந்தின் தலைமையிலான போலீசார் கிட்டாம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த மூன்று இளைஞர்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் முண்ணுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது அவர்களிடம் சுமார் 2.3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது மூவரும் வாகராம்பாளையம் பகுதியை சேர்ந்த தீபக்குமார் (20), சந்தோஷ் (24), சதீஷ்குமார் (32) என்பதும் தெரியவந்தது. மூவரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர், மேலும் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...