கோவையில் குட்கா விற்பனை செய்த 10 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை நடக்கிறதா என இன்று போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை நடக்கிறதா என இன்று போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தடை உத்தரவை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டால் முதல் முறை விற்பனை செய்வோருக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாம் முறை ரூ.10 ஆயிரம் மற்றும் மூன்றாவது முறை விற்பனை செய்தால் கடை பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரித்து, அபராதம், சீல் வைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கோவை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ரோந்து சென்றனர். அதில் 10 பெட்டிகளில் குட்கா புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து விறபனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 10 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் என ரூ.50 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. மேலும் மறு முறை குட்கா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...