92.50 கோடி கிலோ பயன்படுத்த முடியாத அரிசி என எடப்பாடி பொய் சொல்வதாக அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு

திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழமை கட்சிகள் அரிசிக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் என்றும் பொதுமக்களை பாதிக்க கூடிய எந்த திட்டத்தையும் திமுக அரசு எதிர்க்கும் அமைச்சர் சக்கரபாணி.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இன்று மதியம் காங்கேயம் பகுதியில் அரிசி ஆலை அதிபர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



பிறகு மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துறை சார் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.



பின்னர் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லை அரவை ஆலைகளுக்கு அனுப்பி தரமான அரிசியை வழங்க இன்று மதியம் அரிசி ஆலை அதிபர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளோம், தமிழகத்தில் 17 லட்சம் டன் நெல் தேங்கியுள்ளது. அதை தரமான முறையில் அரைத்து தர அவர்களிடம் கோரிக்கை வைத்தோம்.

1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருக்கும் கடையை பிரித்து தர கோரிக்கை வைத்தனர், அதை செயல்படுத்த அதிகாரிகளிடம் கூறியுள்ளேன், 165 கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்குவதை மாற்றி அதற்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது, அதே போல் பழுதடைந்த கட்டிடங்களை மழைக்காலத்திற்குள் சரிசெய்ய கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 92.50 கோடி கிலோ அரிசி மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக இந்திய உணவுகழக அதிகாரிகள் கூறியுள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தியை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் என குற்றம்சாட்டியவர், கும்பகோணத்தில் 92,500 கிலோ அரிசி அதன் மதிப்பு 33 லட்சம் ருபாய். சேதமடைந்த அரிசி 5% மேல் இருக்க கூடாது, 0.2% கூடுதலாக சேதமடைந்துள்ளது என்பதால் பொதுமக்களுக்கு அனுப்ப கூடாது என்பதற்கு பதிலாக மனித பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல என்று கூறிவிட்டார்கள். இந்த அரிசியை வழங்கிய 2 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் தமிழகத்தில் தற்போதேய அரிசி இருப்பு 3 லட்சத்து 23 ஆயிரத்து 584 டன் தான் உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி 9 லட்சம் டன் என்று கூறியுள்ளார். உண்மைக்கு புறம்பான செய்தியை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கண்வலிக்கிழங்கிற்கு முறையான விலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய ஒன்றிய அரசிடம் கூறப்பட்டுள்ளது.

அரிசிக்கு விதிக்கபட்ட ஜி.எஸ்.டி தொடர்பாக எந்த கண்டனமும் திமுக அரசு தெரிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரிசிக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பொதுமக்களை பாதிக்க கூடிய எந்த திட்டத்தையும் திமுக அரசு எதிர்க்கும்,அதே போல் பொங்கல் தொகுப்பு தொடர்பாக அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் தமிழ்நாடு முழுக்க 2 இடங்களில் மட்டும் தான் தவறு நடந்துள்ளது. அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,46 கோடி பொருட்களும் தரமாக தான் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...