கோவை மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மை பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ ஆய்வு..!

அஜ்ஜனூர்‌ குட்டையில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்பகுதிகளை நில அளவை செய்து மாநகராட்சி நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள நகரமைப்பு அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவிட்டுள்ளார்.


கோவை: விளாங்குறிச்சி, குமுதம்‌ நகர்‌, லைன்‌ கிளப்‌ காலனி பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, ஆகியோர்‌ நேரில்‌ சென்று பொதுமக்களின்‌ குறைகளைக்‌ கேட்டறிந்தார்கள்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வாடு எண்‌.36, 37 மற்றும்‌ 38-க்குட்பட்ட வடவள்ளி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப்பணியாளார்களுக்கான வருகைப்பதிவேடுகள்‌, பிறப்பு இறப்பு பதிவேடு, புகார்‌ பதிவேடுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, தூய்மைப்பணியாளார்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகளில்‌ குப்பை தரம்‌ பிரிக்கும்‌ பணிகள்‌ குறித்தும்‌, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ முகக்கவசம்‌, கையுறைகள்‌ அணிந்து பணிகளில்‌ ஈடுபடுமாறும்‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க அறிவுரை வழங்கி விழிப்புணாவு வேண்டுமெனவும்‌ அறிவுறுத்திய பின்னர், வடவள்ளி, குருசாமி நகர்‌ பூங்காவில்‌ அடிப்படை வசதிகள்‌ குறித்து ஆய்வு செய்து பூங்காவினை மேம்படுத்த திட்டமதிப்பீடு தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



அதனைத்தொடர்ந்து, வடவள்ளி, குருசாமி நகர்‌, லட்சுமி நகர்‌, பொம்மனாம்பாளையம்‌ பிரிவு பகுதியில்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ மூலம்‌ குடிநீர்‌ குழாய்‌ பதிக்கும்‌ பணி முடிவுற்ற இடங்களை நேரில்‌ பார்வையிட்டு, குடிநீர்‌ குழாய்‌ அமைப்பதற்காகவும்‌ தோண்டப்பட்ட தார்சாலைகளை உடனடியாக செப்பனிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு உத்தரவிட்டதைத்‌ தொடர்ந்து,



அப்பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும்‌ கழிவுநீரைச் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, அஜ்ஜனூர்‌ குட்டையில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்பகுதிகளை நிலஅளவை செய்து மாநகராட்சி நிலத்தை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, நகரமைப்பு அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர்‌, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.22க்குட்பட்ட விளாங்குறிச்சி, குமுதம்‌ நகா்‌, லைன்‌ கிளப்‌ காலனி பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு பொதுமக்களின்‌ குறைகளைக்‌ கேட்டறிந்தார்கள்‌. அப்போது ஆணையாளர்‌ தெரிவித்ததாவது, விளாங்குறிச்சி பகுதியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ வாரம்‌ ஒருமுறை செய்வதற்கும்‌, தற்போது விநியோகம்‌ செய்யப்படும்‌ குடிநீரின்‌ அளவை அதிகரித்தும்‌, அதிக நாட்கள்‌ வழங்கவும்‌ பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌. மேலும்‌, அப்பகுதியில்‌ சட்டத்திற்கு புறம்பாக உரிய அனுமதியின்றி இணைக்கப்பட்டுள்ள குடிநீர்‌ இணைப்பைத் துண்டிக்கவும்‌, மோட்டார்‌ மூலம்‌ நீர் உறிஞ்சுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும்‌, அப்பகுதியிலுள்ள தார்‌ சாலைகளை உடனடியாக செப்பனிடவும்‌, மழைநீர்வடிகால்‌ மற்றும்‌ பாதாள சாக்கடைக்கான புதிய திட்ட மதிப்பீடுகளை உடனடியாக தயாரிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல தலைவர்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள்‌ பத்மாவதி, கோவை பாபு (௭) மு.செல்வகுமார்‌, விஜயகுமார்‌, உதவி ஆணையாளர்கள்‌ முத்து இராமலிங்கம்‌, சேகர், உதவி செயற்பொறியாளர்கள்‌ சுந்தாராஜன்‌, ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌ கலாவதி, ஜெயலட்சுமி, உதவி பொறியாளர்‌ சவிதா, மண்டல சுகாதார அலுவலர்‌ பரமசிவம்‌, சுகாதார ஆய்வாளர்‌ ராஜேந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...