கோவையில் நூதன முறையில் பணம் பறித்த திருநங்கை கைது - புகார் அளித்த 24 மணி நேரத்தில் மாநகர போலீஸ் நடவடிக்கை…!

கொடிசியா அருகே காரில் இருந்த தம்பதியினரிடம் பணம் கேட்ட திருநங்கை, கண் இமைக்கும் நேரத்தில் அவர் பர்ஸில் இருந்த 8000 ரூபாயை திருடி சென்றுள்ளார். புகாரின் பேரில், பீளமேடு போலீசார் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை இளன்வாஞ்சி (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் ட்ராஃபிக் சிக்னல் மற்றும் மக்கள் அதிகம் கூடும்.பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில், பணம் கேட்டு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் முகம் சுளிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இரவு நேரங்களில் வேலை முடித்து வீட்டுக்கு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்டு ஆபாசமாக பேசுவது, செல்ஃபோன், பர்ஸ் ஆகியவற்றை பறித்துச் செல்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இரு தினங்களுக்கு முன் கோவை பீளமேடு அடுத்துள்ள ஜி.ஆர்.ஜி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மரியா பிரதீப் (46). இவரது மகன் கொடிசியா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி பள்ளியில் தனது மனைவியுடன் மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். இருவரும் பள்ளியின் முன் காரில் காத்திருந்த போது, அவ்வழியாக வந்த திருநங்கை ஒருவர் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார்.

அப்போது, தனது கார் கண்ணாடியை திறந்த மரியா பிரதீப் தனது பர்சிலிருந்து பத்து ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார் அதனை பெற்றுக் கொண்ட அந்த திருநங்கை, அவர்களிடம் ஒரு ரூபாய் நாணயம் கொடுத்தால் அதை ஆசிர்வதித்து அவர்கள் பர்ஸ்சில் வைத்து தருவதாக கூறியுள்ளார். இந்த சமயத்தில், கண் இமைக்கும் நேரத்தில் அவரது பர்ஸை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார்.

சிறிது நேரம் கழித்து தனது பர்ஸை பார்க்கும் போது, அதில் இருந்த எட்டாயிரம் ரூபாய் மாயமானது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, மரியா பிரதீப் பீளமேடு போலீசில் புகார் அளித்தன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை இளன்வாஞ்சி (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மரியா பிரதீப்-ன் தங்கை (Radio City RJ) மரியா இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூகவளைதளங்களில் பதிவிட்டார். அதில், புகார் அளித்து 24 மணி நேரத்தில் அந்த நபரை கைது செய்த மாநகர போலீசாருக்கு தனது நன்றி மட்டும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...