கோவை வடவள்ளி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் திடீர் ஆய்வு..!

பொதுமக்கள் குப்பைகளை வழங்கும் போது தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் அதற்கான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு சுகாதார ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த தூய்மை பணியாளர்களுக்கான வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவேடுகளையும் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்தும் சோதனை செய்த அவர், தூய்மை பணியாளர் மேற்கொள்ளும் தூய்மை பணியின் போது குப்பையைத் தரம் பிரிக்கும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.



மேலும், தூய்மை பணியாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் குப்பைகளை வழங்கும் போது தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் அதற்கான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு சுகாதார ஆய்வாளர்கள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையாளரின் ஆய்வின் போது மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையாளர் சேகர் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...