கரடியை பிடிக்க வனத்துறைக்கு ஈச்சனாரி பகுதி மக்கள் கோரிக்கை

எந்த நேரத்திலும் கரடி வீட்டுக்குள் புகுந்து விடும் என்ற அச்சத்தில் இருக்கிறோம். இரவு மட்டுமல்லாமல், பகல் நேரங்களிலும் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குள்ளேயே பதுங்கி உள்ளோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் வேலைக்கு செல்பவர்கள், வீடு திரும்பும்போதும், கரடி எதிரே வந்துவிடுமோ என்ற பயத்திலேயே வருகிறோம்.


கோவை: கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு பின்புறம் குரும்ப பாளையம் பிரிவு செல்லும் சாலையில் குழந்தைவேல் நாச்சம்மாள் நகர் உள்ளது. அதன் சுற்றுப்பகுதி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவர், நேற்று நள்ளிரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றார். அப்போது அங்கு அவர் கரடி நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தார்.

ஓடுவதை கண்டதும் கரடி விவேகானந்தனை துரத்தியது. ஆனால் அவர் உடனே வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டு தப்பிதார்.

கரடி அந்த பகுதியில் சிறிது நேரம் உலாவி கொண்டு, வன பகுதியை நோக்கி திரும்பி சென்றது. ஒரு ஆள் உயரத்திற்கு கரடி நிற்பதை கண்டு பயந்துபோனதாகவும், அதனால் காய்ச்சல் வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இந்த பகுதியை சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். கரடி நடமாட்டம் எங்களுக்கு மிகுந்த பீதியை ஏற்படுத்தி உள்ளது. எந்த நேரத்திலும் கரடி வீட்டுக்குள் புகுந்து விடும் என்ற அச்சத்தில் இருக்கிறோம்.

இரவு மட்டுமல்லாமல், பகல் நேரங்களிலும் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குள்ளேயே பதுங்கி உள்ளோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் வேலைக்கு செல்பவர்கள், வீடு திரும்பும்போதும், கரடி எதிரே வந்துவிடுமோ என்ற பயத்திலேயே வருகிறோம்.

வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கரடியை பிடிக்க வேண்டும் என்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...