செஸ் ஒலிம்பியாட் போட்டி- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செல்பி பாயிண்ட்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட்டில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


கோவை: 44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு உலக செஸ் கொண்டாட்டம் கோவையில் முன்னோட்டம் என்ற தலைப்பில் புகைப்படம் எடுக்கும் செல்பி பாயிண்ட் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் புகைப்படம் எடுத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார், அதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் செல்ஃபி பாயிண்டில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.



இந்த புகைப்பட பாயிண்ட் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி முடியும் வரை இருக்கும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...