கோவை சிங்காநல்லூர் ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு, போலீசார் விசாரணை

வங்கி அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் ஏ.டி.எம் மையத்துக்கு விரைந்து சென்று பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை, சிங்காநல்லூர்-திருச்சி ரோட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மைய எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, சிங்காநல்லூர்-திருச்சி ரோட்டில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு இந்த ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் பணம் எடுக்க முடியாததால் கொள்ளையர்கள் திரும்பிச் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் மறுநாள் பணம் எடுப்பதற்காக சென்ற வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் வங்கி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏ.டி.எம் மையத்துக்கு வங்கி அதிகாரிகள் வந்து பார்த்தபோது, பணம் கொள்ளை போகவில்லை என்பதும், ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முடியாமல் மர்ம நபர்கள் விட்டு சென்றதால், லட்சக்கணக்கில் பணம் தப்பியதும் தெரியவந்தது.

இது குறித்து வங்கி அதிகாரி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில், போலீசார் ஏ.டி.எம் மையத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டிவி கேமராவில்வில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் பதிவான காட்சிகளை வைத்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர் அதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...