வனப்பகுதியில் செல்லும் போது யானை இவர் அருகில் வந்து தும்பிக்கையால் இவரை தொட்டுப் பார்த்தும், வாகனத்தை முட்டியும், இவரை மிரட்டியது. இவர் அச்சமடையாமல் யானையிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று அமைதியாகவே நின்று கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் யானை அப்பகுதியில் இருந்து சென்றது.
கோவை: கேரளா அதிரப்பள்ளி சாலையில் காட்டு யானையிடம் நேருக்கு நேர் நின்று தப்பிய அதிர்ஷ்டசாலியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து கேரளா அதிரப்பள்ளி சாலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்வார்கள். இதிலும், வனப்பகுதியில் செல்வதற்காகவே இரண்டு சக்கர வாகனத்தில் அதிக பேர் சென்று வருகின்றனர்.
வால்பாறையில் இருந்து அதரப்பள்ளி சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது அடர்ந்த வனப்பகுதி ஆகும். இதில், காட்டு யானைகள், புலி, சிறுத்தை, காட்டு எருமை போன்றவைகளை சாலையின் குறுக்கே நின்று கொண்டிருக்கும் இதை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிகமாக இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
மேலும், பைக் ரைடர் இரண்டு சக்கர வாகனத்தில் அதிகமாக இப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் சாலக்குடி, பகுதியில் உள்ள கள்ளூர் என்ற பகுதியை சேர்ந்தவர். டெஸ்டன். இவர் ஞாயிற்றுக்கிழமை வால்பாறையில் இருந்து மலுக்கப்பாறை வனப்பகுதி சாலை வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் சாலக்குடி பகுதிக்கு சென்றுள்ளார்.
மலுக்கப்பாறை வனப்பகுதியில் செல்லும் போது திடீரென்று காட்டு யானை ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்தது. டெஸ்டன் வண்டியை ஆப் செய்து சாலையில் யானை வனப்பகுதியில் செல்லும் என்று காத்திருந்தார் யானை நீண்ட நேரமாக அப்பகுதியை நின்றிருந்தது. யானை அவர் அருகில் வந்து தும்பிக்கையால் அவரை தொட்டுப் பார்த்தும், வாகனத்தை முட்டியும், அவரை மிரட்டியது.
இவர் அச்சமடையாமல் யானையிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று அமைதியாகவே நின்று கொண்டிருந்தார். இந்த செயலை பின்னாடி இருந்து மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். யானை சிறிது நேரத்தில் அப்பகுதியில் இருந்து சென்றது. பின்பு அவர் வாகனத்தில் புறப்பட்டு வீட்டுக்கு சென்றார். இது தற்போது வைரல் வீடியோவாக பரவி வருகிறது.