கோவை பொள்ளாச்சி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு..!

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சதுரங்க விளையாட்டு அட்டையில் உள்ள வெள்ளை கருப்பு நிற வர்ணங்கள் பூசும் பணி நடைபெற்று வருகிறது.


கோவை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சதுரங்க விளையாட்டு அட்டையில் உள்ளது போல் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த போட்டிகளில் 186-நாடுகளைச் சேர்ந்த, 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

செஸ் ஒலிம்பியார் போட்டி குறித்து பொள்ளாச்சியில் வருவாய் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த, போட்டி குறித்த பேனர்கள், பொது போக்குவரத்து வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிலைய சாலையில் அமைந்துள்ள, சார் ஆட்சியர் அலுவலக வளாக சுற்றுச்சுவருக்கு, செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சதுரங்க விளையாட்டு அட்டையில் உள்ள வெள்ளை கருப்பு நிற வர்ணங்கள் பூசும் பணி நடைபெற்று வருகிறது.



இதே போல 'தம்பி மஸ்கட் லோகோ' உடன் செல்பி எடுத்துக் கொள்ளும் வகையில் உருவ பொம்மை புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...