மின் கட்டணம் அதிகரிப்பு: தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் அதிர்ச்சி..!

தமிழக மின்துறை அமைச்சரின் மின்கட்டணம்‌ உயர்த்தப்படும்‌ என்ற அறிவிப்பு தொழில்‌ முனைவோர்கள்‌ மத்தியில்‌ பெரும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின்(TACT) தலைவர், ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.


கோவை: மின் கட்டண உயர்வு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோரிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (TACT) தலைவர், ஜேம்ஸ் கூறியதாவது:-



தமிழக மின்துறை அமைச்சரின் மின்கட்டணம்‌ உயர்த்தப்படும்‌ என்ற அறிவிப்பு தொழில்‌ முனைவோர்கள்‌ மத்தியில்‌ பெரும்‌ அதிர்ச்சி தந்து உள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு மேல்‌ கொரோனா பாதிப்பால்‌ தொழில்‌ முடக்கமும்‌, எவ்விதமான முகாந்தரமும்‌ இல்லாமல்‌ தொழில்‌ துறை சார்ந்த மூலப்பொருள்கள்‌ பல மடங்காக உயர்ததாலும்‌ தொழில்‌ துறை இன்று வரை முடங்கி கிடக்கிறது.

தொழில்‌ நகரமான கோவையில்‌ 25,000-க்கும்‌ மேற்பட்ட ஜாப்‌ஆடர்கள்‌ செய்து கொடுக்கும்‌ குறுந்தொழில்கள்‌ சொந்த இடம்‌ இல்லாமல்‌ பெரும்‌ பகுதியினர்‌ வாடகை கட்டிடத்தில்‌ இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில்‌ அரசு சொத்து வரி மாநகர பகுதியில்‌ 150 % உயர்த்தியதால்‌ இட உரிமையாளர்கள்‌ குறுந்தொழில்‌ முனைவோர்களிடம்‌ வாடகை உயர்த்தி கேட்டும்‌ அது போல்‌ கோவை மாநகராட்சி நிர்வாகம்‌ குறு சிறு தொழில்‌ நிறுவனங்கள்‌ கட்டாயமாகத் தொழில்‌ வரி கட்ட சொல்லியும்‌ கடும்‌ நெருக்கடிகள்‌ கொடுத்து வரும்‌ சூழ்நிலையில்‌ தற்போது மின்கட்டணம்‌ உயர்த்தப்படும்‌ என்ற செய்தி பெரும்‌ வேதனையாகத் தொழில்‌ முனைவோர்களுக்கு உள்ளது.

கோவை போன்ற நகரங்களில்‌ இட உரிமையாளர்கள்‌ ஒட்டுமொத்தமாக 100 HP வரை மின்‌ இணைப்பு பெற்று அதை எங்களை போன்ற குறுந்தொழில்‌ முனைவோர்களுக்கு சப்மீட்டர் மூலமாக மின்சாரத்தைப் பகிர்ந்து அளித்து வருவதால்‌ தற்போது உள்ள மின்‌ கட்டணமான யூனிட்‌ ஒன்றுக்கு 6.50 மற்றம்‌ மின்சார வாரியம்‌ வசூலித்து வரும்‌ நிலையில்‌ 1 HP -க்கு 60 ரூபாய்‌ சேரத்தும்‌, 5% GST உள்ளிட்டு மின்சார சேதாரம்‌ எல்லாம்‌ கணக்கிட்டு குறுந்தொழில் முனைவோர்கள்‌ 8.00 ரூபாய்‌ வரும்‌ ஒரு யூனிட்டுக்கு செலுத்திவருகின்றார்கள்‌.

இந்த நிலையில்‌ தற்போது மின்துறை மின்கட்டணம்‌ உயர்த்தினர்‌ அது 10.00 ரூபாய்‌ வரை குறுந்தொழில்‌ முனைவோர்கள்‌ செலுத்தும்‌ நிலைக்கு தள்ளப்படுவார்கள்‌ மேலும்‌ தொழில்‌ நகரமான கோவையில்‌ பம்பு உற்ப்பத்தி குஜாத்‌ மாநிலத்துடன்‌ போட்டி போட முடியாமல்‌ தவித்து வருகிறது. நம்மை காட்டிலும்‌ மார்க்கெட்டில்‌ பம்புகள்‌ 20 % குறைந்து கொடுப்பதால்‌ தற்போது மின்கட்டணம்‌ உயர்த்தினால்‌ நமது தொழில்‌ நிலமை இன்னும்‌ மோசமாக போகும்‌ என்பதால்‌ அரசு உடனடியாக மின்கட்டண உயர்வை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ மேலும்‌ மாதம்‌ மாதம்‌ மின்கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன்‌.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...