கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மூவர் கைது

அவர்களிடம் இருந்து 53 போதை மாத்திரைகள், 2 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.14,600 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் சுகன்யா தலைமையிலான போலீசார் சமந்தப்பட்ட இடத்துக்கு சென்றனர். அப்போது, அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இவர்களிடம் இருந்த 53 போதை மாத்திரைகள், 2 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.14,600 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் மூவரையும் போலீசார் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், அவர்கள் குனியமுத்தூர் டி.ஏ.எச். காலனியை சேர்ந்த பைசல் ரகுமான் (24), என்.பி. இட்டேரியை சேர்ந்த பைசல் (28), குறிச்சி பிரிவை சேர்ந்த ரபீக் (26) ஆகியோரை என்பது தெரியவந்தது.

மேலும், 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த சாவர் என்பவரிடம் போதை மாத்திரைகளை பெற்று வந்ததாக தெரிவித்தனர்.

மேலும், அவரிடம் இருந்து மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கி அவர்களும் பயன்படுத்தி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து, தற்போது, போலீசார் ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகளை சப்ளை செய்யும் அந்த நபரை தேடி வருகிறார்கள்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...