மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கோவை மேயர் உத்தரவு

மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் 86 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று ஜூலை.19- ந்தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா முன்னிலை வகித்தார்.



இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு. பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கிழக்கு மண்டலத்தில் 21 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 13 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 15 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 12 மனுக்களும், மத்திய மண்டலத்தில் 18 மனுக்களும் என 86 மனுக்களை பொதுமக்களை மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் கொடுத்தனர், மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர் இம்மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாநகரப் பொறியாளர் (பொ) எஸ்.அரசு, மண்டல உதவி ஆணையர்கள் சரவணன், அண்ணாதுரை, மோகனசுந்தரி, முத்துஇராமலிங்கம், சங்கர், குமார், உதவி செயற்பொறியாளர்கள் இராமசாமி, செந்தில்பாஸ்கர், சுந்தர்ராஜ், கருப்பசாமி, ஹேமலதா, புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர்கள் விமலா, ஜெயலட்சுமி, கலாவதி, சத்யா, பாபு, உதவி பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...