கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு- அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அச்சம்..!

பாம்பு பிடிப்படாததால் கட்டிடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், பாம்பை பார்த்ததாக கூறப்படும் இடத்திற்கு பின்புறம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் பழைய கட்டிடத்தின் நடுவில் உள்ள காலி இடத்தில் பாம்பு ஒன்றை கண்டுள்ளார்.

இதனை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்பு துறையினர், பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு குப்பைகள் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரமாக தேடியும் பாம்பு தென்படவில்லை.

இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். பாம்பு பிடிப்படாததால் கட்டிடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், பாம்பை பார்த்ததாக கூறப்படும் இடத்திற்கு பின்புறம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குப்பைகள் அதிகமாக உள்ள இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது குப்பைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...