கோவையில் சொந்த நிறுவனத்தில் ரூ.4-கோடி கையாடல் - பொதுமேலாளர், கணக்காளர் கைது..!

பொது மேலாளர், கணக்காளர் இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது பெயரில் உள்ள வீடு, நிலம் ஆகிய சொத்துக்களை வழக்கில் சேர்த்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் சொந்த நிறுவனத்தில் ரூ.4-கோடி கையாடல் செய்த பொது மேலாளர், கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் Space Makers Roofing Systems Pvt.ltd என்ற தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக ரஞ்சித்குமார், அவரது மனைவி ஜிஷா உதவி பொது மேலாளராக செயல்பட்டு வந்தனர்.

இந்த நிறுவனத்தை ஜிஷாவின் பெற்றோர் அமைத்துக் கொடுத்தனர். இந்த நிறுவனத்தில் 300 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ரஞ்சித்குமார் நிறுவனத்திற்கு முறையாக வராமல் ஊதாரித்தனமாக சுற்றித் திரிந்ததாக தெரிகிறது. இதனால் நிறுவனத்தின் பணிகளை ஜிஷா பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த நிறுவனத்தில் 2013 ம் ஆண்டு கணக்காளராக பணிக்கு சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுடன் சேர்ந்து கொண்டு நிறுவனத்தின் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ரஞ்சித்குமார் திருடியுள்ளார். வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி போன்றவற்றை செலுத்தாமல் அந்த தொகையினை தனது கணக்கிற்கு மாற்றிக்கொண்டு, இவற்றை செலுத்தியாக போலி பில்கள், ஆவணங்களை இருவரும் சேர்ந்து தயாரித்து நிறுவனத்தில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரித்துறையில் இருந்து Space Makers Roofing Systems Pvt.ltd நிறுவனத்திற்கு நோட்டீஸ் வந்துள்ளது. இது குறித்து ஜிஷா அந்த அலுவலகங்களுக்கு நேரில் சென்று விசாரித்த போது வருமான வரி, ஜி.எஸ்.டி போன்றவை செலுத்தப்படவில்லை என்பதும், போலியான பில்களை வைத்து ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து தனது கணவர் ரஞ்சித்குமாரிடம் கேட்ட நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். நீண்ட நாட்களாக ரஞ்சித்குமார் திரும்பி வராத நிலையில் அவரது மனைவியும், நிறுவனத்தின் உதவி பொது மேலாளருமான ஜிஷா கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இந்த மோசடி குறித்து புகார் அளித்தார்.

ரஞ்சித்குமார் மீதும், கலைச்செல்வி மீதும் ஜிஷா புகார் அளித்த நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுமார் 4 கோடிக்கும் அதிகமாக நிறுவனத்தின் பணத்தை இருவரும் சேர்ந்து திருடி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ரஞ்சித்குமார் மற்றும் கலைச்செல்வி ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் ரஞ்சித் பெயரில் உள்ள வீடு, நிலம் ஆகிய சொத்துக்களை வழக்கில் சேர்த்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...