பொள்ளாச்சியில் நியாயவிலைக் கடையில் பணம் கேட்டு தகராறு செய்த நகர்மன்ற முன்னாள் உறுப்பினரின் மகன் கைது

கோவை: கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சியில் உள்ள நியாய விலைக் கடையில் பணம் கேட்டு தகராறு செய்த நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் மகன் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சியில் உள்ள நியாய விலைக் கடையில் பணம் கேட்டு தகராறு செய்த நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் மகன் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள 7வது வார்டுக்கு உட்பட்ட கோட்டம்பட்டியில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினராக இருந்த ஜெகநாதனின் மகன் கிருஷ்ணகுமார். இவர் கோட்டம்பட்டியில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று அங்கிருந்த ஊழியர் பாலகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால், கடை ஊழியர் பணம் தர மறுத்துள்ளார்.



இதையடுத்து கிருஷ்ணகுமார் அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைதொடர்ந்து எழுந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகாலிங்கபுரம் போலீசார், கிருஷ்ண குமாரை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவரை சிறையில் அடைக்க நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, நீதிபதி வீட்டில் காவல்துறை பாதுகாப்போடு நின்று கொண்டிருந்த கிருஷ்ணகுமார் திடீரென போலீசாரை தள்ளி விட்டு தப்பியோடினார். இதையடுத்து அவரை பின்தொடர்ந்து மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...