கண்காட்சியில் புத்தகம் வாங்குபவர்களுக்கு ஏராளமான சிறப்பு திட்டங்கள் மற்றும் தள்ளுபடிகள் உள்ளதாகவும், கண்காட்சி வளாகத்தை அடையும் வகையில் அவிநாசி சாலையில் இருந்து இலவச வாகன வசதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் வருகிற 22-ம் தேதியிலிருந்து 31-ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
கோவை கொடிசியா வளாகத்தில் ஜூலை 22 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா அமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து ஆறாவது புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கு நுழைவு கட்டணம் கிடையாது எனவும் முற்றிலும் இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கண்காட்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. அந்த நிகழ்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலைக் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் பத்திரிக்கை அறிக்கையாக அளித்துள்ளார்.
அதன்படி,
22.07.2022- வெள்ளிக்கிழமை
மாலை 5:30 மணி அளவில் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடிசியா தொற்காட்சி வளாகத்தில் துவங்கி வைக்கிறார்.
மூன்று இளம் படைப்பாளர்களுக்கான விருது 25,000 ரூபாயும், வாழ்த்து மடலும் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதன்படி கவிதை பிரிவில் கவிஞர் நிழலி, புனைவுப் பிரிவில் சுரேஷ் பிரதீப், அபுனைவு பிரிவில் வடிவரசு ஆகியோர் விருதுகள் பெறுகின்றனர்.
23.07.2022 சனிக்கிழமை
வரலாற்று அறிஞர் குடவாயில் சுப்பிரமணியத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
24.07.2022- ஞாயிற்றுக்கிழமை
மாலை 4:30 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், ஜி.எஸ்.சமீரன் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த நூலை திரைப்பட இயக்குனர் ஞான.ராஜசேகரன் வெளியிடுகிறார். இலக்கிய கூடல் பிரிவை சேர்ந்த பாலசுந்தரம் இந்த நூலை பெறுகிறார். மாலை 6 மணி அளவில் கண்ணதாசன் பாடல்கள் சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
25.07.2022 திங்கட்கிழமை
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் நவீன இலக்கிய உரை நிகழ்ச்சி.
26.07.2022 செவ்வாய்க்கிழமை
காலை 11 மணியளவில் "Big Bang"- Let Make Engineering Easy என்ற தலைப்பில் மாணவர்களுக்கான அறிவியல் அறிவோம் நிகழ்ச்சியும் மாலை 6 மணி அளவில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் வழங்கும் "இசை இரவு" நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
27.07.2022 புதன்கிழமை
கோயம்புத்தூர் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா. சிறப்பு விருந்தினராக அப்துல் கலாமின் சீடர் தாமு பங்கேற்கிறார்.
28.07.2022 வியாழக்கிழமை
காலை 11 மணியளவில் 5000 பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் திருக்குறள் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது, இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைக்கிறார்.
மாலை ஆறு மணி அளவில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி கலைஞர்களின் நகைச்சுவை நிகழ்ச்சி.
29.07.2022- வெள்ளிக்கிழமை
சாலமன் பாப்பையா மற்றும் குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம்.
30.07.2022 சனிக்கிழமை
பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சார்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி.
31.07.2022 ஞாயிற்றுக்கிழமை
காலை 11 மணியளவில் மகளிர் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், மற்றும் கலைமாமணி விருது வென்ற மதுரை கோவிந்தராஜின் தமிழக கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட உள்ளது.
அதுமட்டுமின்றி நாள்தோறும் பல்வேறு புத்தக வெளியீடுகள் நடைபெற உள்ளதாகவும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் இலக்கிய நிகழ்வுகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், கதை சொல்லும் நிகழ்வுகள், சிறுகதைப் போட்டி, கவிதை போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்காட்சியில் புத்தகம் வாங்குபவர்களுக்கு ஏராளமான சிறப்பு திட்டங்கள் மற்றும் தள்ளுபடிகள் உள்ளதாகவும், கண்காட்சி வளாகத்தை அடையும் வகையில் அவிநாசி சாலையில் இருந்து இலவச வாகன வசதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.