கோவை பொள்ளாச்சி சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய பொதுமக்கள்..!

இருசக்கர வாகனம் பேருந்தின் முன் பகுதிக்கு அடியில் சிக்கியது. இதில் காயமடைந்தவர்களுக்கு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் முதலுதவி அளித்தனர். இதனிடையே பேருந்தை வேகமாக இயக்கிய ஓட்டுநரை வாகன ஓட்டி ஒருவர் அவரது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய தனியார் பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று உடுமலையிலிருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுந்தராபுரம் வழியாக கோவை வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து(SRK) அதிவேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரத்தினம் கல்லூரி அருகே, பேருந்திற்கு முன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.

இருசக்கர வாகனம் பேருந்தின் முன் பகுதிக்கு அடியில் சிக்கியது. இதில் காயமடைந்தவர்களுக்கு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் முதலுதவி அளித்தனர்.



இதனிடையே பேருந்தை வேகமாக இயக்கிய ஓட்டுநரை வாகன ஓட்டி ஒருவர் அவரது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார்.



அதனை அங்கிருந்து ஒருவர் அவரது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த காட்சிகள் வேகமாகப் பரவி வருகிறது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...