கோவை அவினாசி சாலையில் உள்ள சிக்னல்கள் பழுது பார்க்கப்பட்டு, பாதசாரிகள் கடந்து செல்ல கவுண்டவுன் டைமர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை, காவல் ஆணையாளர் இன்று மாலை லக்ஷ்மி மில்ஸ் சிக்னலில் துவக்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகரில் முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்கள் கடந்துச் செல்ல கவுண்டவுன் டைமர்கள் உள்ளது. ஆனால், பாதசாரிகள் சிக்னல்களை கடக்க தனியாக கவுண்டவுன் டைமர்கள் இல்லாததால், இன்னும் சாலையை கடக்க எவ்வளவு நேரம் உள்ளது என்பது தெரியாமல், பாதசாரிகள் பதட்டத்துடன் சாலையை கடக்க வேண்டி உள்ளது.
இந்த நிலையை மாற்ற, மாநகரில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் பாதசாரிகள் கடந்து செல்ல கவுண்டவுன்கள் இணைக்கும் நடவடிக்கையை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார்.
இதன் முதல் கட்டமாக, கோவை அவினாசி சாலையில் உள்ள ஏற்கனவே இருக்கும் சிக்னல்கள் பழுது பார்க்கப்பட்டு, பாதசாரிகள் கடந்து செல்ல கவுண்டவுன் டைமர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை, காவல் ஆணையாளர் இன்று மாலை லக்ஷ்மி மில்ஸ் சிக்னலில் துவக்கி வைத்தார்.

மேலும், இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, சிக்னலில் ஒலிப் பெருக்கிகள் பொருத்தப்பட்டு, சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் கேட்பதற்காக திரையிசை பாடல்களின் கரோக்கிகள் ஒலிக்கப்படுகிறது. மேலும், பணியில் உள்ள காவலர்கள் போக்குவரத்து வீதிமிறலில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் வகையில் மைக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதே போல், மாநகர் முழுவதும் உள்ள அனைத்து சிக்னல்களிலும் இந்த நடைமுறை விரைவில் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.