மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ ஆய்வு..!

தியாகி குமரன்‌ வீதியில்‌ நேரில்‌ சென்று ஆய்வு செய்து, குடிநீரில்‌ கழிவு நீர்‌ கலப்பதால்‌ அப்பகுதியில்‌ உள்ள குடிநீர்‌ குழாயினை புதுப்பித்து விரைவாக குடிநீர்‌ விநியோகம்‌ செய்திட சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ வளர்ச்சி திட்டப்பணிகள்‌, சீர்மிகு நகரத்‌ திட்டத்தின்கீழ்‌ வாலாங்குளம்‌, செல்வம்பதி, முத்தண்ணன்‌ குளங்களில்‌ மேற்கொள்ளப்பட்டுவரும்‌ புனரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, இன்று (18.07.2022) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்.70க்குட்பட்ட தியாகி குமரன்‌ வீதியில்‌ மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ சென்று ஆய்வு செய்து,



குடிநீரில்‌ கழிவு நீர்‌ கலப்பதால்‌ அப்பகுதியில்‌ உள்ள குடிநீர் குழாயினை புதுப்பித்து விரைவாக குடிநீர் விநியோகம்‌ செய்திட சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டு,



அங்குள்ள பொதுமக்களிடம்‌ குடிநீர் விநியோகம்‌ முறையாக உள்ளதா என கேட்டறிந்த பின்னா்‌ குப்பைகளை தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ வழங்கும்போது அவற்றை மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை என தரம்‌ பிரித்து வழங்கிட வேண்டும்‌ என பொதுமக்களிடம்‌ அறிவுறுத்தினார்.



அதனைத்‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌ பெரியகடை வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ கட்டப்பட்டுவரும்‌ சுற்றுச்சுவர்‌ பணியை பார்வையிட்டு விரைவாக பணியை முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



பின்னர்‌, சலிவன்‌ வீதி பகுதியில்‌ சாலையோரம்‌ கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிடச் சுகாதார ஆய்வாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவிட்டார்‌.



பின்னர்‌, மத்திய மண்டலம்‌ இராஜ வீதியில்‌ உள்ள கடைகளில்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களை பயன்படுத்துகிறார்களா என ஆய்வு செய்து, பிளாஸ்டிக்‌ பைகளை பயன்படுத்தாமல்‌ மஞ்சப்பைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌ வீ.வி.எம்‌.நகரில்‌ உள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்தில்‌ திடீர்‌ ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ அங்கு மகப்பேறு தாய்மார்களுக்கு வழங்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்து கேட்டறிந்த பின்னர்‌,



வீ.வி.எம்‌.நகரில்‌ உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்ல பைப்‌ லைன்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதைப் பார்வையிட்டு, இப்பணிகளை விரைவாகவும்‌, தரமானதாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ உத்தரவிட்டார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ உள்ள சங்கனூர்‌ பள்ளம்‌ ரூ.49 கோடி மதிப்பீட்டில்‌ மேம்பாட்டுப்பணிகள்‌, வார்டு எண்‌.74-க்குட்பட்ட செல்வம்பதி, முத்தண்ணன்‌ குளம்‌ ஏரியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்‌ ரூ.31.25 கோடி மதிப்பீட்டில்‌ குளத்தின்‌ புனரமைப்புப்பணிகள்‌, மத்திய மண்டலம்‌ வாலாங்குளத்தில்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டப்பணிகள்‌ ஆகிய பணிகள்‌ நடைபெற்றுவருவதை நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு செய்த ஆணையாளர்‌ இப்பணிகளைத் தரமாகவும்‌, துரிதமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வுகளின்போது, மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ சங்கர், மாமன்ற உறுப்பினா்‌ ஷர்மிளா, செயற்பொறியாளர்கள்‌ (Jnnurm) பி.உமாதேவி, ஹேமலதா, உதவி செயற்பொறியாளர்கள்‌ இராமசாமி, புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலா்‌ விமலா, உதவி பொறியாளர்கள்‌ தியாகராஜன்‌, சத்தியமூரத்தி, சவிதா, சுகாதார ஆய்வாளர்‌ தனபால்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தார்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...