கோவையில் விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை - பல லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதம்..!

கோவை முருகன்பதி அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை கடந்த 30 நாட்களாக, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை முருகன்பதி கிராம விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை பல லட்சம் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தியது.



கோவை மாவூத்தம்பதி ஊராட்சி முருகன்பதி கிராமத்தில் உள்ள குழந்தைமணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்குள் நேற்று நள்ளிரவு புகுந்த ஒற்றை காட்டு யானை தோட்டத்திலிருந்த வாழை மற்றும் தென்னை கன்றுகளை சேதப்படுத்தி சென்றது.



இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போதுகடந்த 30-நாட்களாக இரவு நேரங்களில் வரும் ஒற்றை காட்டு யானை தர்மராஜ், செந்திகுமார், குழந்தைமணி ஆகியோரது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 200-தென்னை மற்றும் வாழைகளை யானை சேதப்படுத்தியுள்ளது.



வாளையாறு ரயில் பாதையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வனத்துறையினர் யானையை விரட்டும் போது தங்களது விளை நிலத்திற்கு புகுந்து அட்டகாசம் செய்வதாகவும், ரயில் பாதை வனப்பகுதியில் இருப்பதால் யானை வரும் போது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். உடனடியாக வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...