பெரியார் பல்கலைக்கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பாஜகவினர் கண்டனம்..!

பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


கோவை: பெரியார் பல்கலைக்கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



சேலத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூலை 14-ம் தேதி வரலாற்று முதுகலை பட்டப்படிப்பு பாடத்திற்கான முதலாம் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் தேர்வில் " தமிழ்நாட்டுக்குரிய தாழ்ந்த சாதிகள் எவை" என வினா கேட்கப்பட்டு "மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன்" என்ற நான்குசாதிகளின் பெயர்கள் விருப்ப பதிலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமன் ராமசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவை மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் விவேக் முன்னிலை வகித்தார்.



இதில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு பெரியார் பல்கலைக்கழகத்தின் அந்த வினாவை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் விவேக், சமூக நீதி என பேசி வரும் திமுக அரசு இதுபோன்ற சமூக நீதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...