ஊசி மூலம் வலி நிவாரண மருந்தை செலுத்திக் கொண்ட கோவை கல்லூரி மாணவன் பலி; மருந்தக உரிமையாளர் கைது…!

மருத்துவரின் பரிந்துறையின்றி, கல்லூரி மாணவர்களிடம் வலி நிவாரணி மாத்திரை ஆர்டர்களை ஆன்லைன் மூலமாக பெற்று கொரியர் மூலமாக மருந்துகளை விற்பனை செய்து வந்த கும்பகோணத்தை சேர்ந்த நபரை கோவை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஆன்லைன் மூலம் போதை மருந்துகளை விநியோகம் செய்த நபரை மதுக்கரை தனிப்படை போலீசார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழசீதை வீதியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன். இவர் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அஜய்குமார் (19). கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், அவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி விடுதி அறையில் இருந்த அஜய்குமார் திடீரென வாத்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து,அங்கிருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஜய்குமார் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திடீரென மயக்கம் அடைந்த அஜய்குமார் எதனால் உயிரிழந்தார் என்பது குறித்து பெரும் சர்ச்சை நிலவி வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் நரம்பு வழியாக வலி நிவாரணி மருந்தை எடுத்துக்கொண்டதும், அதனால் ஏற்பட்ட உயர் இரத்த அழுத்ததால் இருதய செயழிலப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இதனால், கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மதுக்கரை போலீசார் தனிப்படை அமைத்து வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மதுக்கரை ஆய்வாளர் வைரம் தலைமையில் உதவி ஆய்வாளர் கவியரசு அடங்கிய போலீசார் அஜய்குமார் தங்கியிருந்த விடுதியில் மற்றும் சக மாணவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அஜய்குமார் ஆன்லைன் மூலம் போதைக்காக மருந்து வாங்கி அதை நரம்பு மூலம் செலுத்திய போது மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையத்து, விசாரணையை தீவிரபடுத்திய போலீசார் ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்தவர் குறித்த தகவல்களை சேகரிக்க ஆர்மபித்தனர்.

அப்போது, கும்பகோணத்தில் மருந்தகம் நடத்தி வரும் முகமது பசீர் என்பவர் மருத்துவரின் பரிந்துறையின்றி, வலி நிவாரண மருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக ஆடர்களை பெற்று கொரியர் மூலமாக விற்பனை செய்து வந்தது அம்பலமானது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் கவியரசு தலைமையில் கும்பகோணம் சென்ற தனிப்படை போலீசார், முகமது பசீரை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். பின்னர், அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆன்லைன் மூலம் வலி நிவாரண மருந்துகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து, அதை பயன்படுத்திய மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...