சிறுமுகை வனச்சரகத்தில் “ஹெர்பஸ் வைரஸ்” தாக்குதலில் குட்டியானை உயிரிழந்திருக்கலாம் – கால்நடை மருத்துவர்கள் தகவல்.

இறந்த குட்டியானையின் உடல் பாகங்கள் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஐ.ஆர்.ஐ ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும்,, ஆய்வு முடிவுகள் வந்த பிறகே யானை உயிரிழப்பிற்கான முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: சிறுமுகை வனச்சரகம் ஓடத்துறை காப்புக் காட்டில் இறந்த நிலையில் சுமார் 2 மாத ஆண் யானை குட்டி சடலமாக கண்டறியப்பட்டது. இந்நிலையில், யானையின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



முதல் கட்ட ஆய்வில், குட்டி யானையின் உடலில் காயங்களோ, குண்டு பாய்ந்த தடயம் மற்றும் அருகே மின்சார கம்பிகள் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் இறந்த குட்டியானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து, மருத்துவர் சுகுமார் கூறும் போது, "குட்டியானை இறந்து சுமார் 36 மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கலாம். மேலும், குட்டியானையின் குடல் பகுதிகளில் உணவு ஏதும் இல்லை. இருப்பினும்உள் உறுப்புகளில் இரத்த கசிவு இருந்துள்ளது. மேலும்,குட்டி யானையின் இதயம், கல்லீரல் கூல் போன்ற வடிவில் இருந்தது.

யானை மிகவும் குறைவான வயது என்பதால் இதற்கு ஹெர்பஸ் என்ற வைரஸ் தாக்குதல் இருந்திருக்கலாம், இந்த சந்தேகத்தின் அடிப்படையில், நுரையீரல், இருதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும், எலும்பு மஞ்சையும் சேகரிக்கப்பட்டு ஐஸ் பேக்கில் வைத்து உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஐ.ஆர்.ஐ ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் வந்த பிறகே யானை உயிரிழப்பிற்கான முழுமையான விவரங்கள் தெரியவரும்",என தெரிவித்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...