செங்கல் லோடு தேவை எனக்கூறி லாரி உரிமையாளரிடம் பல லட்சம் மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட எஸ்.பியிடம் புகார்.

மணல், செங்கல், ஜல்லிக் கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை விநியோகம் செய்யும் லாரி உரிமையாளர்களுக்கு, கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த கோபிநாத் என்பவர் செல்போன் மூலம் அழைத்து செங்கல் லோடு தேவை எனக் கேட்டு வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ளார்.


கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளுக்கு கட்டுமான பணிக்காக செங்கல் லோடுகளை வாங்கி, சுமார் 100க்கு மேற்பட்டோரிடம்பணம் தராமல் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மணல், செங்கல், ஜல்லிக் கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை விநியோகம் செய்யும் லாரி உரிமையாளர்களுக்கு, கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தகோபிநாத் என்பவர் செல்போன் மூலம் அழைத்து செங்கல் லோடு தேவை எனக் கேட்டு வாங்கியுள்ளார்.

இதையடுத்து பொருட்களை பெற்றுக்கொண்டு லோடுக்கான பணத்தை கொடுக்காமல் அலைகழித்து ஏமாற்றி வந்துள்ளார். இதில், தடாகம் பகுதியை சேர்ந்த ஏராளமான லாரி உரிமையாளர்கள் தனித்தனியாக ஏமாற்றப்பட்ட நிலையில், இது குறித்து அவர்களுக்கு தெரிந்தவுடன், பாதிக்கப்பட்டவர்கள் பேரூர், பொள்ளாச்சி, சிங்காநல்லூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும் போது, சாலையில் தங்களது லாரிகள் செல்லும் போது அதில் உள்ள செல்போன் எண்களை பதிவு செய்து கொண்டும், இணையத்தில் செல்போன் எண்களை சேகரித்தும், கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று குறைவான விலையில் செங்கல் போன்ற கட்டுமான பொருட்களை கொடுப்பதாக பேசிவிட்டு, எங்களுக்கு அழைத்து சுமார் 6 ஆயிரம் முதல் 20 ஆயிரம் செங்கலை ஆடர் கொடுத்துள்ளார்.

இதை நம்பி நாங்கள் கோவையில் செங்கல் உற்பத்திக்கு தடை விதித்துள்ளதால், பழனிக்கு சென்று சொந்த பணத்தை கொடுத்து செங்கல் லோடுகளை ஏற்றி வந்து, பேரூர், செட்டிபாளையம், குரும்பாளையம், கோவில்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லோடுகளை இறக்கினோம். பின்னர், பணத்திற்காக காத்திருப்போம்.

ஆனால், கோபிநாத் நேரில் வராமல்,எங்களுக்கு தெரியாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்வோரிடம் லோடுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சென்று விடுகிறார். பணத்தை பெற, நீண்ட நேரம் காத்திருந்தும், பணம் வரவில்லை. கோபிநாத் அவர் செல்போனை அணைத்து விட்டதால், அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை.



கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இதே போல பலரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கடனை வாங்கி லோடுகளை இறக்கி ஏமாற்றபட்டு தற்போது வாழ்வாதத்திற்கு வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்என்று தெரிவித்தனர்.

சுமார் 100க்கு மேற்பட்டோரிடம் பல லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...