கோவையில் எச்சரிக்கையை மீறி குட்கா விற்பனை – மளிகை கடைக்கு சீல் வைக்க உணவு பாதுகாப்பு துறையினருக்கு காவல்துறை பரிந்துறை…!

தொடர்ந்து எச்சரிக்கையை மீறி குட்காவை விற்பனை செய்து வரும் அந்த மளிகை கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கலாம் என செட்டிபாளையம் போலீசார், உணவு பாதுகாப்பு துறையினருக்கு பரிந்துறை செய்துள்ளனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் அருகே பல முறை அபராதம், வழக்கு பதிவு செய்து எச்சரித்தும், சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்த மளிகை கடைக்கு சீல் வைக்க செட்டிபாளையம் போலீஸார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிடம் பரிந்துறை செய்துள்ளனர்.

கோவை தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் ( 62). இவர் செட்டிபாளையம் - போத்தனூர் சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது கடையில்,தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக வந்த புகார் அடிப்படையில், 3 முறை செட்டிபாளையம் போலீஸார் ஆய்வு மேற்கொண்டு அபராதம் மற்றும் வழக்கு பதிவு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



இந்நிலையில், மாவட்ட எஸ்,பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மீண்டும் இன்று செட்டிபாளையம் போலீஸ் உதவி ஆய்வாளர் சின்னகாமனன் தலைமையில்,மதுக்கரை வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவானந்தம் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மீண்டும் அவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து குட்காவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனிடையே, தொடர்ந்து எச்சரிக்கையை மீறி குட்காவை விற்பனை செய்து வரும் அந்த மளிகை கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கலாம் என செட்டிபாளையம் போலீசார் பரிந்துறை செய்துள்ளனர்.



தொடர்ந்து, குட்கா விற்பனை செய்யும் மளிகை கடைக்கு சீல் வைக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...