எச்சரிக்கையை மீறி குட்கா விற்பனை – கோவை எட்டிமடையில் பேக்கரிக்கு சீல் வைப்பு..!

கோவையில் எச்சரிக்கையை மீறி குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த எட்டிமடையில் உள்ள அமிர்தா பேக்கரிக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.


கோவை: தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆபரேஷன் 2.0 என்ற பெயரில், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் குடோன்களில் பதுக்கி வைக்கும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வெளி மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.



அதே போல் சில்லறை விற்பனையை தடுக்கவும், தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் முறையில் விற்பனையில் ஈடுபடும் கடை உரிமையாளருக்கு ரூ.5-ஆயிரம் அபராதம், இரண்டாம் முறை பிடிபட்டால் ரூ.10- ஆயிரம் மற்றும் மூன்றாவது முறை பிடிக்கப்பட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், 4-ஆவது முறையாக குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கடை மூடி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கோவை எட்டிமடை பிரிவு பகுதியில் செயல்பட்டு வரும் லீலா கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான அமிர்தா பேக்கரியில் கடந்த செப்-2021 தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பேக்கரியில் வைத்து விற்பனை செய்ததாக அபராதம் விதிக்கப்பட்டு, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



ஆனால், தொடர்ந்து இதே போல் குட்கா பொருட்களை விற்பனை செய்ததால் வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில் எச்சரிக்கையை மீறி கல்லூரி, பள்ளி மாணவர்கள் அதிகம் வரக்கூடிய பேக்கரியில் மீண்டும் குட்கா பொருட்களை விற்பனை செய்ததால், மதுக்கரை போலீஸ் ஆய்வாளர் வைரம், கே.ஜி.சாவடி போலீஸ் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோருடன் சென்ற மதுக்கரை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சிவானந்தம் தலைமையிலான அதிகாரிகள் பேக்கரியை மூடி சீல் வைத்தனர். மேலும், கடையில் உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்து, அதற்கான அறிவிப்பு நோட்டீஸை ஒட்டிச் சென்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...