கோவை வாலாங்குளத்தில் துணி வியாபாரி தவறி விழுந்து சாவு..!

திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு குளத்துக்குள் மயங்கி விழுந்தவர் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.


கோவை: கோவை வாலாங்குளத்தில் துணி வியாபாரி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கோவை உக்கடம் அருகே உள்ள ஜி.எம். நகரை சேர்ந்தவர் அப்துல் காதர் (வயது 55). இவர் 5 முக்கில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வாலாங்குளம் ரயில்வே தண்டவாளம் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு குளத்துக்குள் மயங்கி விழுந்தார். தண்ணீரில் மூழ்கிய அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் நீரில் மூழ்கி இறந்த அப்துல்காதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...