தி.மு.க விற்கும், பா.ஜ.க விற்கும் எந்த பகைமையும் கிடையாது, கொள்கைகள் தான் வேறு - கோவையில் பாஜக அண்ணாமலை பேட்டி..!

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தி.மு.க பொய் பிரச்சாரம் செய்கிறது. தி.மு.க விற்கும், பா.ஜ.க விற்கும் எந்த பகைமையும் கிடையாது. கொள்கைகள் தான் வேறு. திமுகவினர் செய்யும் தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம் என தெரிவித்தார்.



கோவை: கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சார்பில் "நமக்காக நம்ம எம்.எல்.ஏ" என்ற நடமாடும் மக்கள் குறை தீர்க்கும் சேவை வாகனத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நடந்த பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக வருகிற 21ம் தேதி அன்று தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டது குறித்து, ஆதாரப்பூர்வமாகப் புகார் அளிக்க உள்ளதாகவும், முதலமைச்சர் தேச பாதுகாப்போடு விளையாடாதீர்கள் எனவும், இவ்விவகாரத்தில் இதுவரை ஒரு சார்ஜ் மெமோ கூட கொடுக்கவில்லை என தெரிவித்தார்.



எந்த ஆட்சியில் நடந்து இருந்தாலும் முதலமைச்சர் முன்னுதாரணமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை எனவும், இந்த நிகழ்ச்சிக்குப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்பதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது எனவும் கூறினார். இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மிகப்பிரமாண்டமாக நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

திருப்பூர் கல்லூரிகளில் ‘செல்பி வித் அண்ணா’ நிகழ்ச்சிக்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்த கேள்விக்கு, தொண்டர்கள் புதிதாக சேர்க்க வேண்டும் என அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர் என்றும், அது குறித்து கேள்விப்பட்டதும் கல்லூரிகளுக்கு முன் அனுமதி இல்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும் என தொண்டர்களிடம் கூறினேன் என்றும், கல்லூரிகளுக்கு அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பினர் பா.ஜ.க வினருடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இது பெரிதுபடுத்த வேண்டிய விசயமல்ல. கல்லூரிக்குள் அரசியல் வேண்டாம் என்பதுதான் எனது நிலைப்பாடு இதுபோன்ற நிகழ்ச்சிகளை பா.ஜ.க வினர் இன்னும் கவனமாக செய்ய வேண்டும் என பதிலளித்தார்.

அதிமுக உட்கட்சி விஷயத்தில் பாஜக நுழையாது என்றும் பாஜக அதிமுக உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது எனவும் கூறினார்.அனைத்து தலைவர்களிடமும் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். அதிமுக தலைமையை முடிவு அதிகாரம் அக்கட்சியின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தான் உண்டு எனவும் தலைமை விவகாரத்தில் அக்கட்சியினரின் முடிவை பா.ஜ.க ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு இருப்பது குறித்து மத்திய நிதி அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறோம் என கூறிய அவர் ஜி.எஸ்.டி கவுன்சிலில் ஏகமனதாக இந்த வரி போடப்பட்டது எனவும், இதில் அரசியல் செய்வது நன்றாக இருக்காது எனவும் இப்பிரச்சனைக்கான தீர்வை பா.ஜ.க போராடி கொண்டு வரும் என கூறினார்.

தமிழகத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளோம் எனவும், யாரும் எங்கும் தப்பிக்க முடியாது என கூறினார். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் யாரையோ காப்பாற்ற மாநில அரசு செயல்படுகிறது.முறையாக விசாரணை இல்லையெனில், நீதிமன்றத்துக்குச் செல்வோம் என தெரிவித்தார்.

மேலும் பொங்கல் தொகுப்பு ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும், ஆளுநரை வம்பு சண்டைக்கு இழுப்பது தான் தி.மு.க.வினரின் முழு நேர வேலை என தெரிவித்த அவர், ஆளுநர் செயல்பாட்டில் தவறு என யாரும் சொல்ல முடியாது எனவும், அவரது செயல்பாட்டை, பேச்சை தி.மு.க வினர் அரசியலாக்குகின்றனர் என கூறினார்.

மேலும்,மக்களுக்கு திமுகஅரசின் மிகப்பெரிய சலிப்பு வந்துவிட்டது என கூறிய அவர், அதனை திசை திருப்ப ஆளுநரை வம்புக்கு இழுத்து திமுகஅரசியல் செய்வதாகவும் கூறினார்.திக தலைவர் வீரமணிக்கு சட்ட திட்டம் தெரியுமா என சந்தேகமாக உள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

முதுகலை வரலாறு கேள்வித்தாளில் 10 வது கேள்வி பெரியாருக்கு யார் பட்டம் கொடுத்தது எனவும், 11 வது கேள்வி சாதி பற்றியும் உள்ளது. ஒரு கையில் பெரியாரையும், மறு கையில் சாதியையும் வைத்துக் கொண்டு தி.மு.க  70 ஆண்டுகளாக அரசியல் செய்கிறது என தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சியில் நடந்த தவறை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் எனவும், வீரமணி தான் முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

நான் தி.மு.க வினரை வசைபாடவில்லை. தி.மு.க  தான் என்னை வசைபாடுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய் பிரச்சாரம் செய்கிறது. தி.மு.க விற்கும், பா.ஜ.க விற்கும் எந்த பகைமையும் கிடையாது. கொள்கைகள் தான் வேறு. திமுகவினர் செய்யும் தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாஜக மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, விவசாய அணி தலைவர் ஜி கே நாகராஜ், பாஜக மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...