கோவையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக ஒரே நாளில் 8 வழக்குகள் பதிவு - ரூ.40 ஆயிரம் அபராதம்….!

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டு சோதனையில், பல்வேறு சில்லறை விற்பனை கடைகளில் இருந்து சுமார் 5.45 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், முதல் முறையாக குட்கா விற்பனையில் ஈடுபட்டு பிடிபடுவோருக்கு ரூ 5 ஆயிரம், இரண்டாவது முறை விற்பனை செய்தால் ரூ.10,000 மற்றும் தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தத.



அதன்படி, கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து கூட்டு சோதனையில் ஈடுபட்டதில், பல்வேறு சில்லறை விற்பனை கடைகளில் இருந்து சுமார் 5.45 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...