கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 565 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டு 565 கிலோ தடைசெய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: தமிழகம் முழுவதும் "ஆபரேஷன் 2.0" என்ற பெயரில் போதை பொருள் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் குடோனில் பதுக்கி வைத்து புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அந்த குடோனில் சோதனை மேற்கொள்ள, மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் அங்கு தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், குடோனில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட 565 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அதை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த எஸ்வந்த் (22), நிஷாந்த் (24) என்ற இருவரையும் கைது செய்தனர்.

இந்த புகையிலை குட்கா பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, பிடிபட்ட இருவரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...