அவினாசி சாலை ஃபன்‌ மால்‌ அருகேயுள்ள மழைநீர்‌ வடிகாலை கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ பார்வையிட்டு ஆய்வு..!

மழைநீர்‌ வடிகாலை மாநகராட்சி ஆணையாளர்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயிலுள்ள செடி, கொடிகள்‌ மற்றும்‌ குப்பைகளை அகற்றி தூர்வாரும்‌ பணியை உடனடியாக செய்ய வேண்டுமென பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



கோவை: அவினாசி சாலை ஃபன்‌ மால்‌ அருகேயுள்ள மழைநீர்‌ வடிகாலை கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ அவினாசி சாலை ஃபன்‌ மால்‌ அருகேயுள்ள மழைநீர்‌ வடிகாலை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயிலுள்ள செடி, கொடிகள்‌ மற்றும்‌ குப்பைகளை அகற்றி தூர்வாரும்‌ பணியை உடனடியாக செய்ய வேண்டுமென பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



இதனிடையே, மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ மசக்காளிபாளையம்‌, செளரிபாளையம்‌ பகுதியில்‌ உள்ள மழைநீர்‌ வடிகாலை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயிலுள்ள செடி, கொடிகள்‌ மற்றும்‌ குப்பைகளை அகற்றி தூர்வாரும்‌ பணியை உடனடியாக செய்ய வேண்டுமென பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

இந்நிகழ்வின்போது,‌ கிழக்கு மண்டல தலைவர்‌ இலக்குமி இளஞ்செல்விகார்த்திக்‌, உதவி ஆணையர்‌ முத்து இராமலிங்கம்‌, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தர்ராஜன்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ ஜீவமுருகராஜ்‌, ஜெரால்டு சத்ய புனிதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடன் இருந்தனர்‌.



மேலும், மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.8 க்குட்பட்ட காளப்பட்டி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ உள்ள பிறப்பு இறப்பு பதிவேடு, புகார்‌ பதிவேடு மற்றும்‌ வருகை பதிவேடுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர்,‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.8க்குட்பட்ட காளப்பட்டி சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ உள்ள பிறப்பு இறப்பு பதிவேடு, புகார்‌ பதிவேடு மற்றும்‌ வருகை பதிவேடுகளை நேரில்‌ பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ அலுவலகத்தின்‌ பதிவேடுகளை கணினியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுவருவதை ஆய்வு செய்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.8க்குட்பட்ட காளப்பட்டி, பிள்ளையார்‌ கோயில்‌ வீதி மற்றும்‌ திலகர்‌ வீதியில்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தூய்மைப்‌ பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வின்போது, சுகாதார ஆய்வாளர்‌ குணசேகரன்‌ உடன்‌ உள்ளார்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...