கண்டெய்னர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பழக்கடை வியாபாரி பலியான சம்பவ இடத்திற்கு சென்ற உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பழக்கடை வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான் (38). இவர் பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு வியாபாரம் முடிந்து தனது மகன் சுஹேல் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, ஆத்துப்பாலம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி திடீரென பிரேக் பிடித்து நின்றதாக தெரிகிறது. இதனால் ஷாஜகானும் பிரேக் பிடித்த போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் கண்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது, இதில் படுகாயமடைந்த ஷாஜகானை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஷாஜகான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சுஹேல் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனும் சம்பவ இடத்தில் விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார்.